ரஷ்யாவின் தானிய ஏற்றுமதியில், முக்கிய வழித்தடமான அசோவ் கடலில், உக்ரைன் தொடர்ந்து கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனின் ட்ரோன் படைகள் ஒரே இரவில் 5 எண்ணெய் டாங்கர்கள் மற்றும் 5 சரக்குக் கப்பல்கள் உட்பட 11 ரஷ்ய கப்பல்களைத் தாக்கியுள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கடந்த ஒன்பது நாட்களில் மட்டும் அசோவ் கடலில் உக்ரைனால் தாக்கப்பட்ட ரஷ்ய கப்பல்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.


இந்த தொடர் தாக்குதல்களால் அசோவ் கடலில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைனின் இந்த நடவடிக்கையை பயங்கரவாத தாக்குதல் என விமர்சித்துள்ளார்.
மேலும்,இது கடற்கொள்ளையர்களை விடவும் மோசமான, பயங்கரவாதம் என்றும் அவர் குற்றம் சாடியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!