அமெரிக்கா மீதான பதிலடி வரி செப்டெம்பர் 8 முதல் அமுலில்!

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு டொலருக்கு டொலர் வரி விதிப்பதற்கான திகதியை கனடாப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்த சில மணிநேரங்களிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கனடாவின் பதிலடி வரி, எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாயக் கருவிகள், காகிதம் மற்றும் மின்னணுப் பொருட்களுக்கே, பதிலடி வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்வதற்காக பல நாட்களாக தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

இருந்தும் அமெரிக்காவின் நியாயமற்ற நிபந்தனைகளால் உடன்படிக்கை கைச்சாத்திடப்படாமல் கைவிடப்பட்டது.

அதனையடுத்தே கனடா பதிலடி வரித் தீர்மானத்தைக் கொண்டு வந்து அதை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 08 திகதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது.

Exit mobile version