களுத்துறை, அளுத்கம, -டிப்போ வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதுண்டதில் முச்சக்கரவண்டிச் சாரதி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.
மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கிப் பயணித்த அலுவலக அதிவேக ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியுள்ளது.

ரயில் கடவையை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !