இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற 77ஆவது குடியரசு தின அணிவகுப்பில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதான் சிம்ரன் பாலா ஒரு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
மத்திய பொலிஸ் படையின் உதவி தளபதியாக விளங்கும் சிம்ரன் பாலா, ஜனவரி 26 அன்று இடம்பெற்ற அணிவகுப்பில் 140 க்கும் மேற்பட்ட ஆண் வீரர்களை கொண்ட படைப்பிரிவை தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார்.

வரலாற்றில் ஒரு பெண் அதிகாரி, முழுமையாக ஆண்கள் மட்டுமே கொண்ட ஒரு பெரிய படைப்பிரிவை வழிநடத்துவது இதுவே முதல் தடவையாக அமைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான ரஜோரியைச் சேர்ந்த சிம்ரன் பாலா, அந்த மாவட்டத்திலிருந்து நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான சி. ஆர்பி.எஃப் இல் தேர்வான முதல் பெண் ஆவார்.
சிம்ரன் பாலா, குருகிராமிலுள்ள சி.ஆர்பி.எஃப் அக்கடமியில் சிறந்த அதிகாரி மற்றும் சிறந்த பேச்சாளருக்கான விருதை வென்றுள்ளார்.
சிம்ரன் பாலாவின் தலைமையிலான அணிவகுப்புடன்,எஸ். எஸ்.பி படைகளை சேர்ந்த வீராங்கனைகளின் மோட்டார் சைக்கிள் சாகசக் குழுக்களும் இதில் பங்கேற்றன.

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!
சுவிட்சர்லாந்தில் வீடு தட்டுப்பாட்டுக்கு வருகிறது வழி!
பொதுப் போக்குவரத்து கட்டணத்திற்கு ‘Bibo’ புதிய செயலி!
இலங்கை – சுவிஸ் உறவின் 70 ஆண்டுகள்!