இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா உமாசங்கர்!
இந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பூஜா உமாசங்கர்.
இவர், இந்திய – இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவர்.

தந்தை இந்தியர் – தாய் இலங்கை சிங்களவர் ஆவார்.
பூஜா,1981ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார்.
இவர் தமிழ், சிங்களம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

2003 இல் “ஜே ஜே” திரைபடத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி
அதனை தொடர்ந்து, ‘அட்டகாசம்’, ‘ஜித்தன்’, ‘பட்டியல்’, ‘தம்பி’, ‘ஓரம்போ’ மற்றும் ‘நான் கடவுள்’ போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகை போன்ற கதாபாத்திரங்களுக்காக விஜய் விருது மற்றும் ஆனந்த விகடன் விருது போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.


நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !