தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக,இலங்கையிலுள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் உயர்வடைந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து, ஆபத்தான நிலையிலுள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் வசந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் மொத்த நீர்த்தேக்க கொள்ளளவில் சுமார் 65 சதவீதம் நிரம்பியுள்ளது.
இதில் 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 12 நீர்த்தேக்கங்களும்,6 நடுத்தர நீர்த்தேக்கங்களும் ஏற்கனவே வான்பாய்ந்து வருகின்றன.
இது
தற்போதைய நிலையில் நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்படுவதால் பெரிய அளவில் வெள்ள அபாயம் இதுவரை ஏற்படவில்லை.
இருப்பினும், எதிர்வரும் நாட்களில் மழை அதிகரித்தால் நீர் வெளியேற்றத்தின் அளவு அதிகரிக்கப்படலாம்.
குறுகிய நேரத்தில் பெய்யும் கடும் மழை காரணமாக, ஆறுகள் இல்லாத தாழ்நிலப் பகுதிகளில் கூட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் வசந்த சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!