ஈரானின் எந்தவொரு தாக்குதலுக்கும் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என சிரேஷ்ட இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் ஈரான் இஸ்ரேலைத் தாக்கினால் இஸ்ரேல் எந்தவொரு சார்போ அல்லது நிபந்தனையோ இன்றி பதிலடி கொடுத்துத் தாக்கும் என நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.


அதேபோல், இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தலைமைப் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் காமிர் நாட்டின் இராணுவம் போரை உடனடியாக மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தயாராக உள்ளது மற்றும் நமக்குத் தீங்கு விளைவிக்கும் எவருக்கும் எதிராக மிகுந்த உறுதியுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
ஜோர்டானிய நகரமான அகபாவைக் குறிவைத்து நேற்று (19) காலை ஈரான் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்தே இந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!