காலாவதியான அனுமதிப் பத்திரத்தை பாவித்து கடத்திவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்.கைதடி ஏ9 வீதிப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் இன்று (09) காலையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மரக்குற்றிகளை ஏற்றிவந்த ஹன்ரர் வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.

இதன்போது காலாவதியான அனுமதிப்பத்திரத்தை பாவித்து மரக்கடத்தலில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

இதன்போது தேக்கு, வேம்பு போன்ற மரங்கள் கடத்திவரப்பட்டுள்ளன.
அதனையடுத்து வாகனத்தையும், மரக்குற்றிகளையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவந்த பொலிஸார், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரையும்,மரக்குற்றிகளையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஐர்ப்படுத்தவுள்ளனர்.


நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !