கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற கொழும்பு குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான கோரிக்கை நேற்று (28) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்வைக்கப்பட்டது.
கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தியிடம் இருந்து மேலதிக வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதன்படி, எதிர்வரும் 2ஆம் திகதி அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் பெற அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதவான், சிறைச்சாலை அதிகாரிக்கு அறிவித்து, வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !