2023 ஒக்டோபரில் இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து காஸா பகுதியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கள் பெற்றோரில் ஒருவரையாவது இழந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறைந்தது 60 ஆயிரத்து 737 சிறுவர்கள் ஒரு பெற்றோரையாவது இழந்துள்ளனர்.


இவர்களில் 52 ஆயிரத்து 95 பேர் தங்கள் தந்தையையும், 5 ஆயிரத்து 929 பேர் தங்கள் தாயையும், 2 ஆயிரத்து 713 பேர் பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளனர்.
மேலும், 8 ஆயிரத்து 858 பேரைக் கொண்ட 2 ஆயிரத்து 276 குடும்பங்கள் “குடிமக்கள் பதிவேட்டிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக” அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 2023 முதல் 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இஸ்ரேல் காசா முழுவதும் தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதால் போர் நிறுத்தத்திற்குப் பின்னர் ஆயிரத்து 100 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் காஸாவின் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: ஐவர் காயம்!
‘சூரிச்’ சிவன் ஆலயத்தால் இடம்பெற்ற தமிழகரன் சனாவின் ஆன்மிக சொற்பொழிவு!
சிரிய வாகன விபத்தில் 35 பேர் பலி: 30 பேர் காயம்!
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!