ஊடகவியலாளரும், எழுத்தாளருமான சண் தவராஜா எழுதிய “சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள்” தொகுதி 1 நூல் அறிமுக விழா சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நூல் அறிமுக விழா, பேர்ண் சைவ நெறிக் கூட மண்டபத்தில் மார்ச் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
‘கலைவளரி’ வாவி பாஸ்கர் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் “விடுதலைப் புலிகள்” பத்திரிகை ஆசிரியர் சு.ரவி, நூல் ஆய்வுரை நிகழ்த்தவுள்ளார்.
கவிஞர் கு.திலக் அறிமுக உரை ஆற்றவுள்ளார். தொழில் முனைவர் கந்தசாமி குமார் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இந்த நிகழ்வில் பாவலர்மணி ரூபா அன்ரனின் கவி வாழ்த்தும் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் சிறப்பு அம்சமாக நடைபெறும் “வரலாறைப் பதிவு செய்தல்” எனும் தலைப்பிலான கருத்தரங்கில் ‘சிவருசி’ தர்மலிங்கம் சசிகுமார், லாவண்யா லக்ஸ்மன், அன்ரன் பொன்ராஜா, கவிஞர் ஈழப்பிரியன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!