சீனா செல்லவுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூன்று நாள்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 13 ஆம் திகதி சீனா செல்லவுள்ளார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், அமெரிக்க ஜனாதிபதி,சீனா வரவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு இன்று (11) தெரிவித்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது அமைகிறது.

அமெரிக்க-இஸ்ரேல்- ஈரான் போர் மற்றும் ஹோா்முஸ் நீரிணை முற்றுகையால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் தாய்வான் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு அமைகின்றது.

Exit mobile version