நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தால் உயிரிழப்புகள், மக்கள் இடம்பெயர்வு மற்றும் பாரிய சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒற்றுமையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த நெருக்கடியான தருணத்தில் நேபாள மக்களுடன் இலங்கை உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
யாழுக்கு மூன்றுநாள் விஜயமாக வருகைதந்துள்ள கியூபா தூதுவர்!
கொக்குவில் பிரம்படிப் படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: மீனவர்களுக்கு விசேட எச்சரிக்கை!