ஹோர்முஸ் நீரிணையின் தெற்கு பகுதியில் “எல் கையா” என்ற பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் ஒன்று தடை செய்யப்பட்ட கடற்பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த கண்ணிவெடிகளில் சிக்கிய சம்பவத்தில் 13 பணியாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு மாலுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
எண்ணெய் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அது கப்பல் முழுதும் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அனைத்து தீயணைப்பு முயற்சிகளும், தோல்வியடைந்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
இதன்படி மீட்பு முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சுமார் 180 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் தற்போது முழுமையாக தீக்கிரையாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 103 பேர் மீட்பு: 140 பேரைக் காணவில்லை!
பிலிப்பைன்ஸ் தீ விபத்தில் பலியானவர் தொகை 35 ஆக உயர்வு!
சாலமன் பாப்பையா காலமானார்!
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப்பேச அமெரிக்காவிற்கு அருகதை இல்லை: ஈரானிய துணை ஜனாதிபதி சீற்றம்!