பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய தம்மைக் கைது செய்வதைக் தடுக்க கோரியே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி மேத்யூ குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!
இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை!
உடைத்தெறியப்பட்டுள்ள உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!