பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணங்க டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், தற்போதைய சூழலில் பேருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் வழமையான கட்டணங்களிலேயே பயணங்களை மேற்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version