ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ள ரேடார் நிலையங்கள் மற்றும் கடலோரக் கண்காணிப்புத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே நிலவி வரும் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்தத் தாக்குதல் “அப்பட்டமாக மீறியுள்ளதாக” ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதல் ஏப்ரல் 8-ஆம் திகதி எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை மீறுவது மட்டுமல்லாமல், ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஒரு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கை என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
வாஷிங்டன் நிர்வாகத்திற்குப் பதற்றத்தைக் குறைப்பதில் விருப்பம் இல்லை என்பதை இந்தத் தாக்குதல்கள் காட்டுவதாகவும், ஈரான் மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான பகைமை மற்றும் ஆத்திரமூட்டும் போக்கின் ஒரு பகுதியே இது என்றும் அமைச்சு சாடியுள்ளது.

அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
ஈரான் தாக்கினால் நிபந்தனையற்ற பதிலடி உறுதி: இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை!
ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையைத் தீவிரப்படுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு!
ஈரான் மீதான தாக்குதலை ஆறாவது நாளாகவும் தெடரும் அமெரிக்கா!