மீசாலை விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரான குடும்ப பெண் பலி!

யாழ்ப்பாணம், தென்மராட்சி கொடிகாமம், ஏ9 வீதி, மீசாலை புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரான குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று(06) நண்பகலில் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வேம்பிராயிலிருந்து ஏ9 வீதி, புத்தூர் சந்தியில் ஏற முற்பட்ட உழவு இயந்திரமும், சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம், நோக்கி பயணித்த மோட்டார்ச் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகின.

சம்பவத்தில் காயமடைந்த பெண், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வடக்கு மாகாண சபையில் பணியாற்றும் மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 37 வயதுடைய வரதன் சோபிதா என்ற உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

↑
Exit mobile version