முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று (11)ஆரம்பமாகியுள்ளது.

அதற்கமைய, யாழ்ப்பாணம் வலி-தெற்கு பிரதேச சபை முன்பாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் உப செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் பொதுச் சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து, முள்ளிவாய்க்காலின் இறுதி யுத்த காலத்தில் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை நினைவுகூரும் வகையில் “முள்ளிவாய்க்கால் கஞ்சி”வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Exit mobile version