வடகொரியா தனது வரலாற்றிலேயே மிகப்பாரிய அளவிலான புதிய போர்க்கப்பல் ஒன்றை அதிகார பூர்வமாகத் தனது கடற்படையில் இணைத்துள்ளது.
‘சோ ஹியோன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 5,000 டன் எடையுள்ள அதிநவீன மல்டிபர்பஸ் போர்க்கப்பல், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது என்று அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார்.

நமது கடற்படையை அணு ஆயுதங்களால் பலப்படுத்தும் திட்டம் திட்டமிட்டபடி தடையின்றி நகர்வதைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக இப்போர்க்கப்பல் திகழ்கிறது என கிம் ஜோங் உன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய போர்க்கப்பலானது, வான் பாதுகாப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களுடன், தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏவக்கூடிய ஏவுகணைகளையும் உள்ளடக்கியுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!