வறட்சியான காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான இழப்பீடு இன்று (04) முதல் வழங்கப்படு வருவதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இழப்பீடு தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வறண்ட காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை, அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்திருந்தன.
இதற்காக சுமார் 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்!