வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை 235 பேர் ஆக உயர்வடைந்துள்ளது.
கரீபியன் கடற்கரை பகுதியான மோரோன் (Moron) நகருக்கு மேற்கே 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நேற்று(25) ஏற்பட்டிருந்தன.



தலைநகர் கராகஸ் (Caracas) உட்பட பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியிருந்தன.
நாட்டின் முக்கிய நுழைவாயிலான சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் பலத்த சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அதனையடுத்து இடைக்கால ஐனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!