ஸிம்பாப்வேயின் கரிபா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கிய 92 பேரின் சடலங்கள் இதுவரை மீட்க்கப்பட்டுள்ளன.
இதில் 18 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியில் மூழ்கிய ஏனையோரை மீட்க 4 படகுகள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட சுழியோடிகள் குழுக்கள் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
90 பேர் மட்டுமே செல்லக்கூடிய குறித்த படகில் சுமார் 153 பயணிகள் வரை பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் சுழல் அலைகள் காரணமாகப் படகு கவிழ்ந்து விபத்துக்கியிருந்தது.
ஸிம்பாப்வே வரலாற்றிலேயே மிக மோசமான படகு விபத்தாக இது கருதப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் கடல்சார் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி எமர்சன் மனங்கக்வா உத்தரவிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!