அமெரிக்காவின் கடுமையான கடல்வழி முற்றுகையை முறியடித்து, ஈரானின் முதல் கச்சா எண்ணெய் தாங்கி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ளன.
சுமார் இரண்டு மாத காலமாக நீடித்து வந்த இந்த முற்றுகைக்கு மத்தியிலும், ஈரானிய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


ஈரானிய கச்சா எண்ணெய் உலகளாவிய சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதன் காரணமாக, சர்வதேச அளவில் பெஞ்ச்மார்க் ஆகக் கருதப்படும் ‘ப்ரெண்ட்’ கச்சா எண்ணெயின் விலை மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 78.40 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

ஜூன் 19ஆம் திகதி கையெழுத்தாகிறது ஈரான் :அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்!
அமெரிக்க விமானப்படை விமானம் வானத்தில் விபத்திற்குள்ளானதில் 8 பேர் பலி!
நடுவானில் மோதிய உலங்கு வானூர்திகள்: அறுவர் பலி!
உயர்வடைந்த கடலோரம்: நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள பேரழிவு!