ஹோர்முஸ் நீரிணை ஊடாக 24 வணிகக் கப்பல்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த வணிகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ளதாகவும்,
இந்தக் கப்பல்கள் அனைத்தும் ஈரானின் புரட்சிகர காவற்படையின் உரிய அனுமதி மற்றும் ஒருங்கிணைப்பைப் பெற்றே பயணித்துள்ளதாகவும் ஈரானின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மீதான எமது நுணுக்கமான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முழு அதிகாரத்துடன் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
அத்துடன், பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பிராந்தியங்களில் தீய எண்ணம் கொண்ட வெளிநாட்டினருக்கு எவ்வித இடமும் இல்லை எனவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
ஈரான் தாக்கினால் நிபந்தனையற்ற பதிலடி உறுதி: இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை!
ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையைத் தீவிரப்படுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு!
ஈரான் மீதான தாக்குதலை ஆறாவது நாளாகவும் தெடரும் அமெரிக்கா!