இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெக்கோ சமன் என்ற பாதாள உலகக் கும்பல் பிரதிநிதியின் கைப்பேசியில்,நாமல் சேர், என்றும் ராஜபக்ஷ சேர் என்றும் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க சபையில் வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று(23) உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார்.
ஆனால், இந்த நாமலும் அந்த நாமலும் ஒன்றா அல்லது இந்த ராஜபக்ஷவும் அந்த ராஜபக்ஷவும் ஒன்றா என்பது தெரியவில்லை. விசாரணைகளில் உண்மை வெளிவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவொரு குற்றவாளியையும் பாதுகாக்காது என்றும் அவர் சபையில் வலியுறுத்தினார்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !