அனர்த்த கால குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக குருதிக் கொடை முகாம் யாழ்ப்பாணத்தில் இன்று(08) நடைபெற்றது.


தேசிய புத்திஜீவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இன்று காலை 8.00 மணிமுதல் 3.00 மணிவரை இந்த குருதிக் கொடை முகாம் நடைபெற்றது.


குருதி நன்கொடை நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நாமல் ராஜபக்ச மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!
நெடுந்தீவில் பாடசாலை வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் சந்திரசேகர்!
கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 37ஆவது நாளாக இன்றும்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்!