ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.




இந்திய அணிக்காக இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 80 ஓட்டங்களை பெற்றார்.
வைபவ் சூர்யவன்ஷி 38 ஓட்டங்களை எடுத்தார்.
பந்துவீச்சில், இலங்கை அணி சார்பாக தரிந்து ரத்நாயக்க மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 9.5 ஓவர்களில் 45 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் இந்திய அணி 124 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்து, ஆசிய விளையாட்டு விழா ஆடவர் கிரிக்கெட் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!
ஆசிய கிரிக்கட் போட்டியில் தங்கம் வென்ற அணியிலுள்ள தமிழக வீரருக்கு 75 இலட்சம் சன்மானம், தமிழக முதல்வர் அறிவிப்பு!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ருமேஸ் தரங்க!
ஆசிய கிண்ண ஆண்கள் 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி!