இந்தியன் பிரீமியர் லீக் 66 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி!

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இரவு (21) நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் 66 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றது .

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது .

இந்த போட்டியில் ஆட்ட நாயகராக மொகமட் சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

Exit mobile version