இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம்!

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன என அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்றைய தினம் (19) தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா மற்றும் கட்டார் தரப்பு பேச்சுவார்த்தையாளர்கள் ஈரானின் உதவியுடன் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று காலை இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடுகள் பரஸ்பரம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, தற்போது இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் போர் நிறுத்த உடன்பாட்டில் ஈடுபட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version