யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள அதிகளவான காணிகளை விடுவிக்க மிக விரைவில் நடவடிக்கை எடுப்போம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் காணி மக்களுக்கே என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
அந்த காணிகளை விடுவிக்கும் முகமாக உயர்மட்ட குழு இன்று(26) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வுகளையும் மேற்கொண்டாம்.
இதில் உடனடியாக விடுவிக்கப்பட கூடிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
குறிப்பாக வழிப்பாட்டிடங்கள், பாடசாலைகள் என்பவற்றை விடுவிக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கவுள்ளோம்.
அதேவேளை , உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பிரதான வீதிகளின் சில பகுதிகள் காணப்பட்டுகின்றன.
அவற்றை விடுவித்து, முழுமையாக வீதியை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.
உடனடியாக விடுவிக்கப்பட முடியாதுள்ள காணிகள் தொடர்பாகவும் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்.
விமான நிலைய விஸ்தரிப்புக்காக எத்தனை ஏக்கர் காணிகள் தேவை என்பது தொடர்பாக ஆராயப்படுகிறது.
அந்த காணிகளை வழங்குவது தொடர்பாக எதிர்காலத்தில் பேச்சுக்களை நடாத்தவுள்ளோம்.
அதே போல் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பாக விவசாய திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்.
அந்த தரவுகள் வந்ததும் அதனையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

சட்டவிரோத மணலுடன் நிறுத்தாது சென்ற டிப்பர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது: இரு டிப்பர்கள் கைப்பற்றல்!
13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!