அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதனைத் தொடர்ந்து 26 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிற்கு திரும்பினர்.


உலகக் கிண்ணத்துடன் மன்னர் குடும்பத்தினரையும், பிரதமர் பெட்ரோ சான்செஸையும் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.
அதன்பின், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான மான்க்லோவா அரண்மனையிலிருந்து சிபெலெஸ் சதுக்கம் வரை திறந்த பேருந்தில் நகரின் மையப்பகுதி வழியாக வெற்றி ஊர்வலமாகச் சென்றனர்.
“நாங்களே சாம்பியன்கள்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சீருடையை வீரர்கள் அணிந்து வழிநெடுகிலும் ரசிகர்களுடன் நடனமாடி மகிழ்ந்த அவர்கள், உற்சாக வரவேற்பைப் பெற்றனர்.

ஐந்து ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அத்தபத்து சாதனை!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்ட இலங்கை அணி!
பெர்லின் மரதன் போட்டியில் இருந்து செபஸ்டியன் சாவே விலகல்