ஐந்து ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அத்தபத்து சாதனை!

இந்தோனேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து 5 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச மகளிர் இருபதுக்கு 20 வரலாற்றில் பதிவான 5 ஆவது சிறந்த பந்துவீச்சாக இது அமைந்துள்ளது.

மேலும், சமரி அத்தபத்துவின் கிரிக்கெட் வாழ்க்கையில் பதிவான சிறந்த பந்துவீச்சாகவும் இது காணப்படுகிறது.

இந்தப் போட்டியில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹெட்-ட்ரிக்’ (Hat-trick) சாதனை படைத்ததன் மூலம், மகளிர் இருபதுக்கு 20 போட்டியில் ஹெட்-ட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதலாவது இலங்கை வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Exit mobile version