வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று(27) கலந்துரையாடல் இடம்பெற்றது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி, சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தில், “காணாமலாக்கப்பட்டோர் மாநாடு” ஒன்றை நடாத்தும் முகமாகவே இந்த கலந்துரையாடால் இடம்பெற்றது.



இலங்கை அரசாங்கத்திடம் காணாமலாக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவதற்கு அல்லது நீதியைப் பெற்றுத் தருவதற்கு எவ்வித நம்பிக்கைக்குரிய பொறிமுறைகளும் இல்லை என்பதையும்,
சர்வதேச விசாரணையே தமக்குத் தேவை என்பதையும் வலியுறுத்தும் வகையில் இமமாநாடு அமையவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், ப. சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,



சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத் திரு வேலன் சுவாமிகள், சட்டத்தரணி நடராஜா காண்டீபன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஞானசார தேர்ரின் பொதுமன்னிப்பை வலுவிழக்கச் செய்து தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம்!
நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!