ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி, அந்தப் பதவியிலிருந்து உத்தியோக பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் நேரடி அறிவுறுத்தல்களை மீறி சோஹாரா புகாரி செயற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
குறிப்பாக, அவர் தனது வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வழங்கியமை கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கட்சி ஒழுக்க விதிகளை மீறியமைக்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் ஊடாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன் இறுதி முடிவாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
சோஹாரா புகாரியின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதை அடுத்து, அவர் மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவித்தல் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் தொழிலாளி ஒருவர் பலி!
நாமல் ராஜபக்ச மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!
நெடுந்தீவில் பாடசாலை வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் சந்திரசேகர்!
காஸாவில் 60 ஆயிரம் சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர்: காஸா சுகாதார அமைச்சு தெரிவிப்பு!