சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இன்று(10) இடம்பெற்றுள்ளது.
குறித்த உரையாடலுக்கு அமைவாக, சங்கீதசனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாமை காரணமாக சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் பிணைக் கோரிக்கையை விடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, அமைச்சர் சந்திரசேகரருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் உரையாடல் இடம்பெற்றது.
அதன்போது ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளதோடு, சங்கீத்சனின் தாயாருடனும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடியிருந்தார்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !