யாழ்.செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைக்குழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று(22) பார்வையிட்டது.
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ தலைமையிலான இந்தத் தூதுக்குழுவில், இத்தாலியத் தூதுவர் டொமியானோ ஃபிரான்கோவிக், ஜெர்மனித் தூதுவர் டி பெலிக்ஸ் நியூமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பர்ட் மற்றும் நெதர்லாந்துத் தூதர் வீபே டி போயர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.



ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் வருகைதந்திருந்த தருணத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



இந்நிலையில், செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (21) இடம்பெற்றன.
இதன்போது அருகருகே இரு சிறுவர்களின் என்புக்கூடு உட்பட 13 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.



சில என்புக்கூடுகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் சில என்புக்கூடுகளுக்கு மண்டையோடுகள் இல்லாத நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேற்கொண்ட 112 சோதனைகள்!