மாவீரர் நாளை முன்னிட்டு, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வு யாழ்.சாவகச்சேரி பொன் விழா மண்டபத்தில் நேற்று(23) இடம்பெற்றது.
மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையவர்கள் மண்டபத்திற்கு வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு பொதுச்சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

மேலும் இதன்போது கலை நிகழ்வுகள்இடம்பெற்றதோடு, மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்தநிகழ்வில் நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் போராளிகள், சாவகச்சேரி நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


உணவு ஒவ்வாமையால் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!
கொழும்பு – காலிமுகத்திடல் நீராடிய மாணவர்களில் ஒருவர் பலி: இன்னொருவர் மாயம்!