சிறுமி ஒருவரைக் பாலியல் ரீதியாக தகாத நடத்தைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரிடம் DNA பரிசோதனைக்காக இரத்த மாதிரியை வழங்குமாறு அனுராதபுர பிரதம நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன நேற்று (12) உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி, சந்தேக நபர் ஜூன் 16ஆம் திகதி அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நேரில் சென்று தனது இரத்த மாதிரியை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிட்டம்புவ பொலிஸார் சமர்ப்பித்த கூடுதல் அறிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சம்பவம் தொடர்பான ஆவணங்கள் 2026 மே 4ஆம் திகதி அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.
வழக்கு தொடர்பாக, பாதிக்கப்பட்டவருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆடைகள் மற்றும் பிற பொருட்களில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் பரிசோதனைகளில் DNA தொடர்பான முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த DNA முடிவுகளை, சந்தேக நபரின் இரத்த மாதிரியுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனை பரிசீலித்த நீதிபதி, DNA பரிசோதனைக்கு தேவையான இரத்த மாதிரியை பெறும் உத்தரவை வழங்கினார்.
பரிசோதனை முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, சந்தேக நபர் முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்சரிவு மஞ்சள் எச்சரிக்கை நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு விடுப்பு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர்!
உணவு ஒவ்வாமையால் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!