நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமானுக்கும், தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு தமிழ்நாடு நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று(19) காலையில் இடம்பெற்றது.
இன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணிவரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது
தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம்,
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.

தமிழ்த் தேசியப் பேரவை சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர்
பொ.ஐங்கரநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன்,தேசிய அமைப்பாளர் த.சுரேஸ்,
உத்தியோகபூர்வ பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ்,
பிரசாரச் செயலாளர்
சட்டத்தரணி ந.காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
மும்பையின் மான்கூர்டு பகுதியில்இடிந்து விழுந்த நான்கு மாடிக் கட்டடம்: ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலி!
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
நோர்வே செஸ் சாம்பியனான முதல் இந்தியர் வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!