யாழ். தென்மராட்சி மீசாலை வடக்கு, “சுடர் ஒளி” முன்பள்ளிச் சிறார்களின் “வேடம் தாங்கல்” நிகழ்வு முன்பள்ளி வளாகத்தில் நேற்று (27) இடம்பெற்றது.
சுடர் ஒளி முன்பள்ளி தலைமை ஆசிரியர் சிவதாசன் மிதுலா தலைமையில் இடம்பெற்ற வேடம் தாங்கல் நிகழ்வில், முன்பள்ளிச் சிறார்கள் பல்வேறு வேடங்களை தரித்து சபையோரை மகிழ்வித்தனர்.



இந்த நிகழ்வில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் க.ரஜனிகாந்தன், தமிழ் இணைய கல்விக்கழக வடக்கு மாகாண இணை இணைப்பாளர் ஆர்.துஷ்யந்தி, சமூகசேவையாளர் திருமதி சிவநாதன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.



அதனைத் தொடர்ந்து வேடம் தாங்கல் நிகழ்வில் பங்கேற்ற முன்பள்ளிச் சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.




விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!