யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து பச்சிளம் குழந்தை மற்றும் இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 10 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் நேற்று (15) முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 25ஆவது நாள் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, புதிதாக மேலும் 5 மனித என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதோடு, ஏற்கனவே வெளிப்பட்டிருந்த என்புக்கூடுகளில் சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தையின் என்புக்கூடுகள் உள்ளடங்கலாக 10 பேரினது என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
நேற்று மீட்கப்பட்ட மனித என்புக்கூடுகளில் பெரும்பாலானவை உடைந்த நிலையிலும், சீரற்ற முறையிலுமே காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரையான அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 360 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் 351 என்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத மணலுடன் நிறுத்தாது சென்ற டிப்பர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது: இரு டிப்பர்கள் கைப்பற்றல்!
13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!