டெஸ்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர் தேவ்தத் படிக்கல்!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், இந்திய அணித துடுப்பாட்ட வீரரான தேவ்தத் படிக்கல், தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, நேற்று (15) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் 77 ஓட்டங்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் சுப்மன் கில் 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிரபத் ஜெயசூர்ய வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல், டெஸ்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

Exit mobile version