தமிழக முதல்வர் விஜய்க்கு “இசட் பிளஸ்” பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!

மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய பாதுகாப்பான “இசட் பிளஸ்” (Z+)பாதுகாப்பு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மற்றும் ஜெயலலிதாவை தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகவெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக நேற்று முன்தினம் (10) பதவியேற்றுக்கொண்டார்.

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு ஜோசப் விஜய்க்கு தமிழக காவல்துறையின் உயரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும் இந்த பாதுகாப்பை மீறி நேற்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வாகனத்தை பொதுமக்கள் நெருங்கினர்.

இதை முற்றிலும் தடுக்கும் வகையில், மத்திய உள்விவகார அமைச்சு முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு அவருக்கு நாட்டின் உயரிய பாதுகாப்புகளில் ஒன்றான ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக இசட் பிளஸ் பாதுகாப்பு இந்தியாவில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மிக முக்கிய நபர்களுக்கு தான் மத்திய அரசால் வழங்கப்படும் பாதுகாப்பாக காணப்படுகிறது.

இந்த “இசட் பிளஸ்” பாதுகாப்பில் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் பயிற்சி பெற்ற 55 பாதுகாப்பு பணியாளர்கள் இதில் உள்ளனர்.

இவர்கள் 10க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.

இந்த பாதுகாப்பில் கமாண்டோக்கள் உயரிய ரகமான எம்பி 5 வகை நவீன துப்பாக்கிகள், குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் முன்பும் பின்பும், பைலட் வாகனங்களுடன் பாதுகாப்பு வழங்குவர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version