“தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் சுமந்திரனும், சிவஞானமுமே தவிர சிறிதரன் அல்ல” என சிவசேனை அமைப்பின் இலங்கைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துரைத்த அவர், 2025 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழரசுக் கட்சியிலிருந்து பலர் நீக்கப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பில் அரியநேந்திரன், கொழும்பில் தவராசா, யாழ்ப்பாணத்தில் சரவணபவன், மானிப்பாயில் அனந்தி சசிதரன், மன்னாரில் சிவகரன் எனப் பட்டியல் நீள்கிறது.
மலட்டுத்தன்மை உடைய கட்சியாக தமிழரசுக் கட்சியை மாற்றுவதே சுமந்தனுடைய நோக்கமாக இருக்கிறது” – என்றார்.

உணவு ஒவ்வாமையால் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!
கொழும்பு – காலிமுகத்திடல் நீராடிய மாணவர்களில் ஒருவர் பலி: இன்னொருவர் மாயம்!