பாகிஸ்தான் மகளிர் அணியுடனான T 20 தொடரை இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இலங்கை மகளிர் அணி 2:1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
மூன்றாவது இறுதியுமான இந்தப் போட்டி இன்று (04) தம்புள்ளையில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில், துடுப்படுத்தாடிய இலங்கை மகளிர் அணி,
20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 113 ஓட்டங்களை பெற்றது.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
T20 தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 17.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்டT20 தொடரை இலங்கை மகளிர் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஐந்து ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அத்தபத்து சாதனை!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்ட இலங்கை அணி!
பெர்லின் மரதன் போட்டியில் இருந்து செபஸ்டியன் சாவே விலகல்