22 ஆவது பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கற்பதற்காக இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கிலாந்து சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின்போது கல்வி, அபிவிருத்தி ஆய்வுகள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச பங்களிப்புகள் தொடர்பான சந்திப்புகளிலும் அவர் ஈடுபடவுள்ளார்.

மேலும் இங்கிலாந்து கல்வி இராஜாங்க செயலாளர் திருமதி பிரிட்ஜெட் பிலிப்சன், இங்கிலாந்தின் உள்நாட்டலுவல்கள் செயலாளர் திருமதி இவெட் கூப்பரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், சசெக்ஸ் பல்கலைக்கழகம்,
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இடம்பெறும் நிகழ்வுகளிலும் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !