இலங்கை மின்சார சபைத் தொழிற் சங்கங்கள், நாடு தழுவிய ரீதியில்,6 மணித்தியால அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
மின்சார சபை தொழிற்சங்கங்கள், 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10 ஆம் திகதி வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன.
குறித்த பேச்சு வார்த்தை தீர்மானம் எவையும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.
இந்த நிலையில், மின்சார சபை தொழிற் சங்கங்கள் இன்று நண்பகல் 12.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை 6 மணித்தியால அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்தப் போராட்டத்தின் போது தீர்வு கிடைக்காதவிடத்து நாளை முதல் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !