புத்தளம் – முந்தல் – நவதன்குளம் பகுதியில் காரும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று(12) காலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!