முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (27) காலையில் முன்னிலையாகியுள்ளார்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால், வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாகவே அவர் முன்னிலையாகியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு முதல் 2024 வரையான காலப்பகுதிகளில் ஜனாதிபதி நிதியிலிருந்து பெற்றதாக கூறப்படும் நிதி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது.
முன்னாள் அமைச்சர்கள் 23 பேர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதே இந்த விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்த பட்டியலில் முன்னாள் அமைச்சர் பி. ஹரிசனின் பெயரும் உள்ளடங்கியுள்ள நிலையில், வாக்குமூலமளிக்க அவர் இன்று முன்னிலையாகியுள்ளார்.

குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் தொழிலாளி ஒருவர் பலி!
நாமல் ராஜபக்ச மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!
நெடுந்தீவில் பாடசாலை வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் சந்திரசேகர்!
காஸாவில் 60 ஆயிரம் சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர்: காஸா சுகாதார அமைச்சு தெரிவிப்பு!